மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என மின்சார சபை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அவர்களில் கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சக்திவாய்ந்த அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சரின் வீட்டுக்கு மட்டும் சுமார் 12 மில்லியன் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமல் இருப்பதாக ஜெயலால் வெளிப்படுத்தினார்.
ஆகையால், சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சரின் வீட்டிற்கு மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கிருலப்பனை மின்சார சபை அலுவலகத்தின் உள்ளுர் மின் பொறியியலாளர்கள் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வீட்டிற்குச் சென்றதாகவும் ஆனால் அவர்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் தனது பாதுகாப்புப் தரப்பினரை வைத்து மின் மீட்டரை அணுக பொறியாளர்களை அனுமதிக்க மாட்டார் என்றும் ஜெயலால் தெரிவித்தார்.