எதிர்வரும் வாரத்திற்குள் எரிபொருளை ஏற்றி வரும் 5 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்முலம் நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருக்கும் என தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கும் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்குவதற்கு CPC தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மின்சார சபை எரிபொருள் இருப்புக்களை பெற ரூபாவில் செலுத்த வேண்டும் என விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.