web log free
September 26, 2023

இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறைக்கு வடமேல் திசையில் 16 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைதாகியுள்ளதுடன், இதன்போது இந்திய மீனவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் வடக்கு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.