web log free
October 18, 2025

அனைத்தையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்த தயாராகும் ரயன்

மாகந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட ஐந்து பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று பொறுப்பேற்கப்பட்டனர்.

அதன்பின்னர் நடிகர் ரயன் வேன் ரோயனிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து 18 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டதுடன்,வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரயன் வேன் ரோயன், நாளை அல்ல நாளை மறுநாள் தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கருத்து வெளியிடுவதாக தெரிவித்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd