நாடு முழுவதும் இன்றைய தினம் நான்கரை மணித்தியால மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
3 வலயங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும், ஏனைய வலயங்களுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
இன்றைய தினம் 7 மணித்தியால மின்சார தடையை ஏற்படுத்த அனுமதி வழங்குமாறு, இலங்கை மின்சார சபை தம்மிடம் கோரியதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
எனினும், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைத்தமையினால், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலையீட்டில், அந்த கால எல்லை குறைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
700 மெகா வோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்உற்பத்தி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, இன்றைய தினம் காலை 8:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.