இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக கொழும்பு கோட்டையில் இன்று(23) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம், அகில இலங்கை பொது கடற்றொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட பல மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து, சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொழும்பு கோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.