web log free
October 01, 2023

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் தற்போதைய தலைவருக்கும், முன்னாள் தலைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது.

குறைந்த தரத்திலான ஊசி மருந்துகளை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைக்காக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன, நேற்றைய விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகள் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.