web log free
March 22, 2026

விபத்துகளில் நால்வர் பலி

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் இருவர் வேன் மோதி உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு ஊழியர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேள, குருவிட்ட பகுதியில் வீதியில் உள்ள மரங்களை வெட்டிக் கொண்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவரும் மற்றும் ஓர் நபரும் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd