web log free
December 22, 2024

சட்டவிரோத நாணயமாற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி

 
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் என்பன அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது.

ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது நபர்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களாயின் அது சட்டவிரோத செயற்பாடாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அவ்வாறான நிலையங்கள் அல்லது நபர்கள் தொடர்பாக வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தின் 0112 39 88 27, 0112 47 73 75 அல்லது 0112 39 85 68 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Last modified on Wednesday, 02 March 2022 03:07
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd