தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
தங்களின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று முதல் அமுலாகும் வகையில் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
மோசமான அழிவை நோக்கிய பயணத்தில் தேசிய சுதந்திர முன்னணி தொடர்ந்தும் இணைந்து பயணிக்க முடியாது என்பதை தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியிலிருந்து விலக தீர்மானித்ததாகவும் ஜயந்த சமரவீர சுட்டிக்காட்டினார்.