தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது அல்ல என, கல்வி அமைச்சு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு குழுவில் கல்வியாளர்கள், சிறுவர் உளவியலாளர்கள் மற்றும் சிறுவர் நோய் சம்பந்தமான விஷேட வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.