web log free
December 23, 2024

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (16) உயர்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டாவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சரத் ஜயமான்ன, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தனது கட்சிக்காரரான பாட்டாலி சம்பிக்க ரணவக்கவை அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு பயணிப்பதற்காக தற்போது நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தளர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, பிரதிவாதி கோரிய காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அவருடைய கடவுச்சீட்டை ஏப்ரல் 27 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd