web log free
December 23, 2024

மற்றுமொரு அரசியல் பல்டிக்குத் தயாராகும் சம்பிக்க

'இருண்ட எதிர்காலத்தை ஒளியேற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாட்டில் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் 43ஆவது பிரிவின் பிரதிநிதிகள் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அனுமதியுடன் கலந்துகொண்டனர்.

இது சம்பிக்க ரணவக்கவின் சமீபத்திய மற்றுமொரு அரசியல் பாய்ச்சல் என்பதையே காட்டுகிறது. சம்பிக்க ரணவக்கவின் சரித்திரமே இவ்வாறான அரசியல் மாற்றங்கள் நிறைந்ததாகவே தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கரு பரணவிதான, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, ஊடகப் பிரிவின் பிரதானி தனுஷ்க ராமநாயக்க உள்ளிட்ட 43ஆவது பிரிவின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

கடந்த 15ஆம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பிக்க ரணவக்கவும் தீவிரமாக கலந்துகொண்டார். இதற்காக அவரது 43வது பிரிவின் துருப்புகளும் ஈடுபடுத்தப்பட்டன.

காலத்துக்கு காலம் அரசியலை மாற்றும் சம்பிக்க ரணவக்க மற்றுமொரு அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது.

1994 இல், அவர் சிஹல உறுமய (JHU) என்ற அமைப்பை உருவாக்கினார். 2001 தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றதுடன் அந்த ஆசனத்திற்காக கட்சிக்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

அதன் பின்னர் சோம தேரரின் பிரபல்யம் என்ற போர்வையில் சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தி சம்பிக்க ஹெல உறுமயவல உருவாக்கினார்.

நாட்டின் பல பிரபலமான துறவிகள் 2004 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தர்ம அரசை உருவாக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

நகர்ப்புறங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப் பெற்றனர். அங்கும் பெற்ற ஆசனங்களால் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும், ரணில் மற்றும் மைத்திரியின் நல்லாட்சியிலும் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்த சம்பிக்க ரணவக்க, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொண்டார்.

கடந்த 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்திலும் சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd