web log free
December 23, 2024

வரலாற்றில் முதன் முறையாக மூடப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும்.

இன்றைய பங்குச் சந்தை நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 552.18 புள்ளிகளாலும், S&P SL20 சுட்டெண் 314.96 புள்ளிகளாலும் வீழ்ச்சியடைந்திருந்தன.

இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,351.69 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 2,716.20 புள்ளிகளாகவும் காணப்பட்டன.
 
 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd