கொழும்பு நுகேகொட பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்திரளானவர்கள் இணைவதால் கொழும்பில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது.
தற்போது காலை 6 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை அதிகாலை 6.00 மணி வரை மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (01) அதிகாலை நாட்டின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டது.
மிரிஹான பெங்கிரிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது