web log free
October 01, 2023

மாயமான கைதுப்பாக்கிகள்

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி களஞ்சியசாலையானது குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.