இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஜனாதிபதியின் இந்தத் தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் கோட்டாபய அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.