web log free
March 28, 2026

'முன்னேற்றத்துக்கு நல்லிணக்கம் முக்கியம்'

நாட்டில் நல்லிணக்கம் இல்லாமல் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சமய ஒருமைப்பாட்டு நிகழ்வுகளின் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்க புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் போரிட்டுக்கொள்ளும் அளவுக்கு நாடு சென்றிருந்தது என்றும் தற்போது இந்தநிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd