web log free
December 23, 2024

இன்று நாட்டில் நிதி அமைச்சர் யார் ? - சஜித் கேள்வி

நாட்டில் ஏன் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்ட்டது, எந்த காரணத்திற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? சமூக வலைத்தளங்கள் நாட்டில் முடக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

இன்று நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. புது நிதி அமைச்சர் பதவி ஏற்றார் பின்னர் அவரே விலகிச் சென்றார் இதற்கான காரணம் என்ன? இன்று நாட்டில் நிதி அமைச்சர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.     

அமைதியான போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார்  சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர்.  யார் இவர்கள்? எதற்காக இப்படி வந்தார்கள்?  எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Last modified on Wednesday, 06 April 2022 09:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd