அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை கைவிட்டு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை எனவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் மாற்றப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.