பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்காக எடுத்த தீர்மானம் இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்க இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட பலரது வற்புறுத்தலின் பேரில் பிரதமர் இந்த முடிவை மாற்றியுள்ளார்.
பிரதமர் பதவி விலகினால் தானும் அரசியலில் இருந்து விலகுவேன் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நிலையில், அழுத்த நிலைமை காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.