எரிபொருள் விலைகள் மற்றும் வரி விகிதங்கள் அடுத்த ஆறு மாதங்களில் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் உதவி கேட்கத் தயாராக இருப்பதாக அவர் ராய்ட்டர் செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க இலங்கை தயாராகி வருவதாகவும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்திற்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூலை மாதம் செலுத்த வேண்டிய $1 பில்லியன் கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அடுத்த ஐந்து வாரங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.