web log free
October 01, 2023

ஈரானியர்களின் விளக்கமறியல் நீடிப்பு

தென் கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

அன்றைய தினம், ஈரானிய மொழிபெயர்ப்பாளரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நீதவான், நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பேருவளை கடற்பிராந்தியத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவில் துரிதப்படுத்துமாறும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்க்குமாறும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.