web log free
March 23, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யானை

சோமாவதி வனப்பகுதியில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

சோமாவதி வனப்பகுதியின் மெதிரிகிரிய – பேரிவில பகுதியிலேயே இந்தத் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், வேட்டைக்காரர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என, சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பேரிவில மற்றும் கிரிந்தலை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd