web log free
September 17, 2025

ஒன்பது நாட்களின் பின் கூட்டம் இழந்த காலி முகத்திடல் போராட்டக் களம்!

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. 

நீண்ட விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை முதல் பலர் பணிக்கு சென்றிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

எனினும் இன்று பிற்பகல் முதல் போராட்டக்காரர்கள் மீண்டும் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd