கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் இலங்கைக்கு உதவ ஒவ்வொரு நாடுகளும் தயங்கிக் கொண்டு வருகிறது. இந்தியா அரசு மட்டும் தான் தொடர்ந்து உதவிகளை செய்து கொண்டு வருகிறது. எனவே இலங்கை மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் தேவையும் விலைவாசியும் அதிகரித்துள்ளது. எனவே இலங்கை மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர்.
அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு தினம்தோறும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக கடல் வழியாக வருகின்றனர். அந்த வகையில் இன்று 15 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை புரிந்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 15 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து இன்றுவரை சுமார் 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இன்று வந்த 15 இலங்கை தமிழர்களிடம் கடும் விசாரணை நடைபெற்று வருகிறது.