தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, அடுத்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 65 உறுப்பினர்கள், சுயாதீன உறுப்பினர்கள் 39 பேர், மொட்டு அணியின் சுயாதீன உறுப்பினர்கள் 10 பேர், முஸ்லிம் உறுப்பினர்கள் 3 பேர், டளஸ், சரித்த உள்ளிட்டவர்கள் என 120 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கம்மன்பில கூறினார்.