இடைக்கால அரசென்பது மற்றுமொரு ஏமாற்று நடவடிக்கையாகும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சுட்டிக்காட்டினார்.
” கள்வர்கள் அங்கம் வகிக்கும் தூய்மையற்ற இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி அங்கம் வகிக்காது. நான் தலைவராக இருக்கும்வரை அதற்கான அனுமதியை வழங்கமாட்டேன்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். மக்களின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது. கள்வர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்தால், எப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவருவது? 2015 இல் ஏற்பட்ட நிலைதான் மீண்டும் ஏற்படும்.”
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் உறுப்பினராகுவதற்கு தாம் தயார் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.