web log free
December 22, 2024

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி எழுதியுள்ள அவசர கடிதம்

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஏப்ரல் 29ஆம் திகதி காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்து அது தொடர்பில் கலந்துரையாடுமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் ஆளும் கட்சித் தலைவர்கள் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து தற்போது சுயேச்சைக் குழுக்களாக செயற்படுபவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகா  சங்கத்தினர், பேராயர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

பிரதமர் மற்றும் அரசாங்கம் இராஜினாமா செய்ததன் பின்னர் உருவாக்கப்படவுள்ள உத்தேச அரசாங்கத்தின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd