எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கம் 'தேசிய இனக்கப்பாட்டு அரசாங்கம்' என பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு உரிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததன் பின்னரே அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.