web log free
April 02, 2026

விபத்தில் பெண் உயிரிழப்பு நால்வர் படுகாயம்

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் மற்றும் லொறி என்பன நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட இந்த விபத்தில் வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd