web log free
October 01, 2023

விகாரி வருடம் இன்று பிறக்கிறது!

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று பிற்பகல் 1.12 இற்கு புதுவருடம் பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் இன்று பிற்பகல் 2.09 இற்கு விகாரி வருடம் உதயமாகிறது.

மருத்து நீர் தேய்த்து நீராட காலை 9.12 முதல் இரவு 9.12 வரையான நேரம் பொருத்தமானது என, வாக்கிய பஞ்சாங்கமும், காலை 10.09 தொடக்கம் மாலை 6.09 வரையான நேரமும் பொருத்தமானது என, திருக்கணித பஞ்சாங்கமும் குறிப்பிடுகின்றன.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், கைவிசேஷம் செய்வதற்கு 14ஆம் திகதி இரவு 10.31 முதல் 11.15 வரையிலும், 17ஆம் திகதி முற்பகல் 10.16 முதல் 11.51 வரையிலும், 18ஆம் திகதி முற்பகல் 9.47 முதல் 11.46 வரையிலான நேரங்கள் சிறந்தவை.

திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், 14ஆம் திகதி பகல் 11.00 மணி தொடக்கம் 12 மணி வரையிலும், இரவு 8.20 தொடக்கம், 930 வரையிலும், 15ஆம் திகதி அதிகாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையிலும் கைவிசேஷடத்திற்குரிய சுபநேரங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.

விகாரி வருஷப் பிறப்பில் வெள்ளைப் பட்டாடை அணிவது சிறந்தது என வாக்கிய பஞ்சாங்கம் கூறுகிறது. சிவப்புப் பட்டாடை அணிவது நன்மை தரும் என திருக்கணித பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

Last modified on Wednesday, 11 September 2019 01:53