புதுவருட காலப்பகுதியில் நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மற்றும் நகரப்பகுதிகளில் காணப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளமை காரணமாக மின்சாரத்துக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், தற்போதும் போதுமான அளவு மழைவீழ்ச்சி கிடைக்காமை காரணமாக மின்னுற்பத்தியில் முன்னேற்றமற்ற தன்மை காணப்படுகின்றது.
எனவே, தேவையற்ற முறையில் மின்சாரத்தை பயன்படுத்தி வீணடிக்கவேண்டாம் என்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம், பல மணித்தியாலங்கள் ஹம்பாந்தோட்டை, எம்பிலிபிட்டிய, தெனியாய, பலாங்கொடை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.
லக்சபான மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து பலாங்கொடை பகுதிக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் மின் வடங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.