web log free
October 01, 2023

மைத்திரி - ரணில் - மஹிந்த புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கு, தெற்கு பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த புத்தாண்டானது, சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு தேசிய கலாசாரம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி புதிய வழியில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து பிரஜைகளும் வளமான இலங்கைக்கு பங்களிப்பு வழங்குமாறும் கோரியுள்ளார்.