web log free
March 27, 2026

சுற்றிவளைப்பு தொடரும்

பண்டிகை காலப்பகுதியில் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தல் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தல் உள்ளிட்டவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

பட்டாசுக்கள் கொளுத்தும் போது, தீக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ளாது அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த பண்டிகைக் காலப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் அவதானமாக பெற்றோர் இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு கோரியுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துவோர், போக்குவரத்து விதிகளை மீறுவோரை கைது செய்யவதற்கான பொலிஸார் மேற்கொண்டுள்ள விசேட சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இன்று நாளையும் இடம்பெறவுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd