web log free
March 30, 2026

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிரிமா நிறுவனம் 40 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அந்த விலை அதிகரிப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், 450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி தின்பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விலைகள், இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென அச்சங்கம் அறிவித்துள்ளது.

Last modified on Thursday, 19 May 2022 09:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd