web log free
September 26, 2023

தேர்தலுக்கு முன்னர் அரசியல் புரட்சி ஏற்படாது

இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் அரசியல் புரட்சி தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜீத்.பீ.பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசியல் புரட்சியொன்று ஏற்படமாட்டாது என, அவர் கூறியுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட முறைகளுக்கு மாறாக செயற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுத்த மாட்டார் என, தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சியில் ஈடுபட்டால் அதனால் பயன் இல்லை என்று கூறியுள்ளார்.