web log free
April 30, 2025

வெல்கம மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கொட்டாவ அதிவேக வீதியில் கடந்த 09 ஆம் திகதி பயணித்துக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் வாகனத்தை வழிமறித்து நிறுத்திய சிலர், அவரை தாக்கியதுடன், அவருடைய வாகனத்தையும் தீக்கிரையாக்கினர்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் 30 வயதான ஒருவரும், ஹோட்டல் ஒன்றை நடத்தும் 37 வயதான ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹொரணை மற்றும் மாகும்புற பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்றும் 88 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd