web log free
March 28, 2023

இராஜாங்க அமைச்சு பதவி பெறவென வரிசையில் நிற்கும் எம்பிக்கள்

இராஜாங்க அமைச்சர் பதவிக்கு அரசாங்க எம்.பி.க்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும் என்றும், இது 40 ஆக அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் நான்கு பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு  அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

கேபினட் அமைச்சர்கள் நியமனத்தில் போட்டித் தன்மை காணப்பட்டதாகவும், அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.