web log free
January 09, 2026

தனக்கும் குடும்பத்திற்கும் இந்தியாவில் தஞ்சம் வழங்குமாறு மோடியிடம் பிரபல அமைச்சர் கோரிக்கை

தம்மையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பிற்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உரிய முறையில் வழங்கப்படவில்லை எனக் கூறும் அவர், தற்போதுள்ள பாதுகாப்பில் தாம் திருப்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்னும் பல எம்.பி.க்கள் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

21ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் கிராமத்திற்கு திரும்ப முடியாது என ஓமல்பே சோபித தேரர் கூறியதாகவும் அவர் கூறினார்.

உழைத்து சம்பாதித்த தனது சொத்துக்கள் அனைத்தும் காட்டுமிராண்டி கும்பலால் முற்றாக எரிக்கப்பட்டதாகவும், இன்று இந்த நாட்டில் வீடற்றவனாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd