web log free
March 30, 2026

ஜனாதிபதி தலைமையில் இன்று மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு கூட்டத்தை ஜனாதிபதி இன்று (30) கூட்டவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (30) மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 21ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd