web log free
March 28, 2023

இலங்கையில் விவசாயத்தை ஊக்குவிக்க இந்திய பிரதமர் மோடி முடிவு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் சிறுபோக பருவத்திற்கான உரங்களை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இன்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்த 20 நாட்களுக்குள் இதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.