web log free
March 28, 2023

ஜோன்ஸ்டன் பெனாண்டோவை காணவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஒரு குழு குருநாகலில் உள்ள அவரது வீட்டிற்கும் மற்றைய குழு கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கும் அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக எம்.பி அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.