web log free
March 28, 2023

நோய்க்கு மேல் நோய்! மீண்டும் வைத்தியசாலையில் துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில், அவரை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்க சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாக உச்ச நீதிமன்றம் அவரது மன்னிப்பை இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி அவரை கைது செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.