web log free
October 31, 2024

13 வயதுடைய பாடசாலை மாணவி மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார்

கொஸ்கம சாலாவ தோட்டத்தைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர் கொஸ்கம சாலாவ தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.

 கடந்த 5ஆம் திகதி காலை 8 மணியளவில் தான் படிக்கும் பாடசாலையில் சிரமதானம் செய்துவிட்டு வீடு திரும்பவில்லை எனக் கூறி வீட்டை விட்டுச் சென்றதாக சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 07 June 2022 16:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd