web log free
June 26, 2026

நான்கு இலங்கையர்களும் விடுதலை

லண்டனின் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய பிரித்தானிய பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லூட்டன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை வந்திறங்கிய நான்கு இலங்கையர்கள், புகலிடம் கோர முற்பட்ட போது, பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் வியாழக்கிழமை, தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் அந்த நான்கு பேரையும் கைது செய்திருப்பதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், பெட்போர்ட்சைர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd