web log free
March 22, 2026

24 மணித்தியாலங்களில் 329 பேர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 329 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணியில் இருந்து இன்று காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் குறித்த சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான 5519 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேசச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் துபோதையில் வாகனம் செலுத்திய 1270 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd