web log free
November 26, 2024

ஆணைக்குழுவுக்கு மேலதிக பொலிஸ் குழு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த ​கோரிக்கைக்கு இணங்க மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.

இதேவேளை, ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd