web log free
March 20, 2026

முடிவின்றித் தொடரும் மண்ணெண்னை வரிசை!

 
 
ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இலங்னை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது மக்கள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்றுகாத்திருந்த நிலையில் பொலிஸார் மண்ணெண்ணை இன்று பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்ததனையடுத்து பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
 
ஹட்டன் பிரதேசத்தில் வாழும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணெண்ணை கிடைக்குமென காலை முதல் வரிசையில் காத்திருந்தனர். பல மணித்தியாலங்களுக்கு பின் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தனர்.
 
இது குறித்த எண்ணை முகவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர், மண்ணெண்ணை எப்போது வரும் டீசல் எப்போது வரும் அல்லது பெற்றோல் எப்போது வரும் என்று எங்களுக்கு முன்கூட்டி அறிவிப்பதில்லை.வரும் பொழுதான் எங்களுக்கு அறிவிக்கிறார்கள். அதனால் எங்களுக்கு உரிய நாளில் வாருங்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க முடியாது என்றார். 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd