web log free
May 15, 2026

பொலிஸ் சார்ஜன்ட் வீட்டிற்குள் புகுந்து அரிசி, பருப்பு, சீனி, பிஸ்கட் திருட்டு

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து அரிசி, பருப்பு, சீனி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சார்ஜன்ட் தற்போது அம்பாறை பிரதேசத்தில் கடமையாற்றி வருவதாகவும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த போது ஜன்னலை உடைத்து திருடியுள்ளதாகவும் கோனாபினுவல பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டுச் சம்பவத்தின் பின்னர் அறையும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், தீயினால் அறையில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd